அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, March 29, 2016

நரகில் சேர்க்கும் பித்அத்…

           தினம் ஒரு ஹதீஸ் -117

அல்லாஹ்வும், அவனது தூதரும் மார்க்கமாக்கிய செயல்களைத் தவிர்த்து வேறு செயல்களை மார்க்கம் என்ற பெயரில் செய்வது பித்அத் எனப்படும், மார்க்கம் கூறாத ஒன்றை மார்க்கத்தில் உள்ளது போல் செய்யும் ஒவ்வொரு செயலுமே நரகத்தில் சேர்த்து விடும்.   (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உரையின் போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கு ஏற்ப புகழ்ந்து விட்டு, “அல்லாஹ், யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரை வழிகெடுப்பவர் எவருமில்லை. அவன் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் எவருமில்லை. செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்” 
என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: ஸஹீஹ் இப்னு குஸைமா 1689

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.