அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, March 10, 2016

நோயினால் வாழ்க்கை விரக்தி அடைந்திருப்பவர்


اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الأَعْلَى

அல்லாஹம்மஃக் ஃபிர்லீ வர்ஹம்னீ வ அல்ஹிக்னீ பிர் ரஃபீகில் அஃலா

பொருள் : யா அல்லாஹ்! என்னை மன்னித்தருள்வாயாக! என் மீது கருணை பொழிவாயாக! மிக உன்னதமான தோழனோடு என்னை சேர்த்து வைப்பாயாக!. 

ஆதாரம் : புகாரி, முஸ்லிம்


لَا إِلَهَ إِلَّا اللهُ ، إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ

லாயிலாஹ இல்லல்லாஹு இன்ன லில் மவ்த்தி ல ஸக்ராத்தின்

பொருள் : பொருள் :வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை தவிர யாருமில்லை. நிச்சயமாக மரணத்திற்கு கஷ்டமான பல நிலைகள் உள்ளன.  ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (மரணம் நெருங்கிய) நேரத்தில் தங்களின் இரு காரங்களையும் தண்ணீரில் நுழைத்து முகத்தில் தடவிக் கொண்டு இவ்வாறு கூறினார்கள். 

ஆதாரம் : புகாரி


 لَا إِلَهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ  لَا إِلَهَ إِلَّا اللهُ وحْدَهُ  لَا إِلَهَ إِلَّا اللهُ وحْدَهُ لَا شَرِيكَ لَهُ  لَا إِلَهَ إِلَّا اللهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ  لَا إِلَهَ إِلَّا اللهُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ

லாயிலாஹா இல்லல்லாஹு வல்லாஹு அக்பர், லாயிலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு, லாயிலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு, லாயிலாஹா இல்லல்லாஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, லாயிலாஹா இல்லல்லாஹு வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி

பொருள் : அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அல்லாஹ் மிக பெரியவன். அல்லாஹ் ஒருவனை தவிர வணக்கத்திற்குரியவன்  யாருமில்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை  தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. ஆட்சியதிகாரம், அனைத்துப் புகழும் அவனுக்குரியதே! அவனை தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. தப்பிப்பதற்க்கான ஆற்றலும், எதுவும் செய்யும் சக்தியும் அல்லாஹ்வை கொண்டே தவிர வேறு யார் மூலமுமில்லை.  

ஆதாரம் : திர்மிதி, இப்னுமாஜா


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.