அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, March 09, 2016

சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் -2

             தினம் ஒரு ஹதீஸ் - 97         (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், ஸாபித் இப்னு கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒருவர், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் அவரைப் பற்றிய செய்தியை அறிந்து கொண்டு தங்களிடம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம் சென்றார். ஸாபித் இப்னு கைஸ் (ரலி) தம் வீட்டில் தலையைக் (கவலையுடன்) கவிழ்த்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டார். ‘உங்களுக்கு என்ன ஆயிற்று?‘ என்று அவரிடம் கேட்டதற்கு அவர், ‘(பெரும்) தீங்கு ஒன்று நேர்ந்துவிட்டது. நான் நபி (ஸல்) அவர்களின் குரலை விட என்னுடைய குரலை உயர்த்தி(ப் பேசி) வந்தேன். எனவே, என் நற்செயல்கள் வீணாகிவிட்டன. நான் நரகவாசிகளில் ஒருவனாகி விட்டேன்” என்று பதிலளித்தார். உடனே, அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஸாபித் இப்படியெல்லாம் கூறினார் என்று தெரிவித்தார். அடுத்த முறை அந்த மனிதர் (பின்வரும்) மாபெரும் நற்செய்தியுடன் திரும்பிச் சென்றார். (அதாவது அம்மனிதரிடம்) நபி(ஸல்) அவர்கள் ‘நீ ஸாபித் இப்னு கைஸிடம் சென்று, ‘நீங்கள் நரகவாசிகளில் ஒருவரல்லர்; மாறாக, சொர்க்கவாசிகளில் ஒருவரே’ என்று சொல்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)

நூல்: புகாரி 3613


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.