அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, March 01, 2016

கியாமத் நாளின் அடையாளங்கள் -1

     தினம் ஒரு ஹதீஸ் - 89

உலக அழிவு வெள்ளிக்கிழமையில் தான் நிகழும், அது எந்த வெள்ளிக்கிழமை என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே தெரியும், ஆனால் உலக அழிவு ஏற்படும் முன்பு அதை நமக்கு எச்சரிக்கும் விதமாக பல அடையாளங்கள் நிகழும், அவற்றை பார்ப்போம்:


(ஒரு முறை) நாங்கள் (நபி (ஸல்) அவர்களது அறைக்குக் கீழே) பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களை எட்டிப்பார்த்து, “எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள், “யுக முடிவு நாளைப் பற்றி (பேசிக் கொண்டிருக்கிறோம்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (பெரிய) பத்து அடையாளங்களைக் காணாத வரை யுக முடிவு நாள் ஏற்படவே செய்யாது” என்று கூறி விட்டு,
அந்த அடையாளங்களைப் பற்றிக் கூறினார்கள்:

1.(வானிலிருந்து வரும்) புகைமூட்டம், 

2.தஜ்ஜால், 

3.(பேசும்) பிராணி, 

4.மேற்கிலிருந்து சூரியன் உதிப்பது, 

5.மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்குதல், 

6.யஃஜூஜ் , மஃஜூஜ் கூட்டத்தார்,

7.8.9.மூன்று நிலநடுக்கங்கள். 
ஒன்று கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும், இன்னொன்று அரபு தீபகற்பத்திலும்.

10.இறுதியாக யமன் நாட்டிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி மக்களை விரட்டிக் கொண்டு வந்து ஓரிடத்தில் ஒன்று கூட்டும்.

அறிவிப்பவர்: அபூசரீஹா ஹுதைஃபா பின் அசீத் அல்ஃகிஃபாரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 5558


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.