அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, March 11, 2016

துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை - 08

         தினம் ஒரு ஹதீஸ் - 99

     வெள்ளிக்கிழமையில் நாம் கேட்கும் அனைத்து துஆவும் ஏற்கப்படும் ஒரு நேரம் உண்டு. அது எந்த நேரமாக இருக்கும் என்பதை தெரிவிக்கும் ஹதீஸ்களில் ஒன்றை சென்ற பதிவில் பார்த்தோம். இது சம்பந்தமான மற்றொரு ஹதீஸ்:

அந்த நேரம் சம்பந்தமாக ஜும்ஆ தொழுகையில் துஆ கேட்பது போல் அன்றைய தினத்தின் அஸருக்குப் பின் கடைசி நேரத்தில் (மஃரிப் பாங்கு சொல்வதற்கு முன்) துஆ கேட்பதைச் செயல்படுத்த வேண்டும். அந்த நேரம் சம்பந்தமாக இரு அறிவிப்புகள் வந்துள்ளதால் இரண்டையும் செயல்படுத்துவதன் மூலம் அதை அடையலாம்.


“ஜும்ஆ தினத்தின் பன்னிரெண்டு மணி நேர பகல் நேரத்தில், ஒரு முஸ்லிம் (துஆ ஏற்கப்படும் அந்த அரிய) நேரத்தை அடைந்து (நன்மையான) எதை கேட்டாலும் அல்லாஹ் அவனுக்கு அதை வழங்காமல் இருப்பதில்லை. அஸருக்குப் பின் இறுதி நேரத்தில் அதை தேடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: அபூதாவூத் 886


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.