அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, March 10, 2016

ஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் - 02

      தினம் ஒரு ஹதீஸ் - 98

  ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே , நான் அவனைப் பிடித்துக் கொண்டேன் ; உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன் என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்……..) இறுதியில் அவன் , நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை (2:255) ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான் என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்ன போது) அவன் பொய்யனாயிருந்தும் , உங்களிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3275


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.