அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, February 24, 2016

மறுமை நாளில் தண்டிக்கப்படுபவர்களில் மூவர்...

             தினம் ஒரு ஹதீஸ் - 83

    “ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக வலிந்து சொல்வாரானால் ,அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒரு போதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) 

தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில் ‘அல்லது தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்’ யார் அவர்களது உரையாடலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறாரோ அவரது காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். 

எவர் (உயிரினத்தின்) உருவப்படத்தை வரைகிறாரோ, அவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 7042


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.