அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, February 22, 2016

காலணி அணிவதின் ஒழுங்குகள்...

              தினம் ஒரு ஹதீஸ் -81

அல்லாஹ், நம் பாவங்களை மன்னித்து நம்மை நேசிக்க வேண்டுமானால் அவனது தூதரான முஹம்மது (ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டுமென்று திருக்குர்ஆன் (3:31) கட்டளையிடுகின்றது. காலணி அணிவதிலும் நன்மை கிடைக்க வேண்டுமா? இதோ! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறை:


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்!

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி)

புஹாரி-5855

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரண்டு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள். 

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி)

புஹாரி-5856


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.