அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, February 23, 2016

அல்லாஹ்விற்கு செய்த நேர்ச்சையை தர்ஹாக்களில் நிறைவேற்றலாமா?

           தினம் ஒரு ஹதீஸ் - 82

நேர்ச்சை என்பதை எவ்விஷயத்திலும் செய்யாமல் இருப்பதே சிறந்தது. செய்து விட்டால் கட்டாயம் நிறைவேற்றியே ஆக வேண்டும். நேர்ச்சை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். அவனைத் தவிர மற்றவர்களுக்கு செய்யக் கூடாது, சிலர் அல்லாஹ்விற்கு நேர்ச்சை செய்தாலும் அதை தர்ஹா போன்ற இடங்களில் நிறைவேற்றுவார்கள், இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் தடை உண்டு. யாருக்கு நேர்ச்சை செய்கிறோம் என்பது எப்படி முக்கியமான விஷயமோ, அது போல் எவ்விடத்தில் அந்நேர்ச்சையை நிறைவேற்றுகிறோம் என்பதும் முக்கியமான விஷயமாகும்.


   புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று ஒருவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நேர்ச்சை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று (அல்லாஹ்விற்காக) நேர்ச்சை செய்திருக்கின்றேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்விடத்தில் அறியாமைக் கால மக்களால் வணங்கப்படக்கூடியவைகளில் ஏதேனும் இருக்கின்றதா?” என்று (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு (மக்கள்) “இல்லை” என்று பதிலளித்தார்கள். “அவர்களது திருவிழாக்களில் ஏதேனும் ஒரு திருவிழா அங்கு நடப்பதுண்டா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர்கள் “இல்லை” என்று பதிலளித்தார்கள். “நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள். ஏனெனில் "அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்திலோ அல்லது மனிதனுக்கு இயலாத காரியத்திலோ நேர்ச்சையை நிறைவேற்றுதல் இல்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் இப்னு ளஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத் 3313


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.