அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, February 29, 2016

காலையிலும், மாலையிலும்

      காலையிலும், மாலையிலும், படுக்கைக்குச் செல்லும் போதும் நான் என்னக் கூறவேண்டும் என்று அபூபக்கர்(ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் பின்வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்..


للّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرّ نَفْسِيْ وَشَرّ الشَّيْطَانِ وَشِرْكِهِ

அல்லாஹும்ம ஃபா(த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாத(த்)தி, ரப்ப குல்லி ஷையின் வமலீ(க்)கஹு, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்(த்)த, அவூது பி(க்)க மின் ஷர்ரி நஃப்ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி

பொருள் : இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: அஹ்மத்காலையிலும், மாலையிலும் 112,113,114 ஆகிய அத்தியாயங்களை மூன்று தடவை ஓதினால் அதுவே அனைத்துக் காரியங்களுக்காகவும் போதுமானது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்..

ஆதாரம் : நஸயீ


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.