அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, February 12, 2016

வெள்ளிக்கிழமையும் ஸலவாத்தும்...

        தினம் ஒரு ஹதீஸ்-71      “உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அந்நாளில் தான் அவரது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் தான் உலக அழிவுக்கான ஸூர் ஊதப்பட்டு, மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாகக் கூறுங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் (மலக்குகள் மூலம்) எடுத்துக் காட்டப்படுகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? உங்கள் உடல் தான் மண்ணோடு அழிந்து விட்டிருக்குமே!” என்று நபித்தோழர்கள் கேட்ட போது, “நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 885No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.