அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, February 15, 2016

தொழுகையின் ஆரம்ப துஆ -1

           தினம் ஒரு ஹதீஸ்-74

 தொழுகையை அல்லாஹூ அக்பர் என்று தக்பீர் கூறி துவக்கியவுடன், அல்ஹம்து சூரா ஓதும் முன் கூற வேண்டிய துஆ

  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதல்) தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள். நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மௌனமாக இருக்கும் போது என்ன கூறுவீர்கள்? என்று கேட்டேன் அதற்கு அவர்கள் நான்,

“அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப், அல்லாஹும்ம நக்கினீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், அல்லாஹும் மஹ்ஸில்னி மின் கத்தாயாய பில் மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்த்”(இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போன்று என் தவறுகளைவிட்டும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!) என்று கூறுகிறேன் என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 744


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.