அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, December 28, 2015

சமாதி வழிபாடு...

தினம் ஒரு ஹதீஸ்-25

அல்லாஹ், நிரந்தர நரகம் கொடுக்கக்கூடிய செயல்களில் ஒன்று இணைவைத்தல். சிலர் இறந்தவர்களின் அடக்கத்தலங்களில் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களை வணங்குகின்றனர். இத்தகைய சமாதி வழிபாடும் நிரந்தர நரகத்தில் சேர்க்கும் இணைவைத்தலே, இஸ்லாம் இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், “எச்சரிக்கை! உங்களுக்கு முன்னிருந்த(சமுதாயத் த)வர்கள் தங்களுடைய நபிமார்கள், நற்குணங்கொண்டோரின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். நீங்கள் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்துவிட வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்” என்று கூறியதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : ஜுன்தப் (ரலி)

நூல் : முஸ்லிம் 925

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.