அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, December 27, 2015

அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான் என்று கூறலாமா?

தினம் ஒரு ஹதீஸ்-24

அல்லாஹ்விற்கு மாறு செய்யும் வகையிலான பாவங்களுக்கு ஒருவர் அதற்காக வருந்தி அவர் உயிருடன் இருக்கும் போதே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை அல்லாஹ் மன்னிப்பவனாக இருக்கிறான். எனவே எந்த ஒரு மனிதரையும் பார்த்து “அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான்” என்று கூறக் கூடாது. அப்படிக் கூறுவது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதைப் போன்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்ன மனிதனை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ், “நான் இன்ன மனிதனை மன்னிக்க மாட்டேன் என்று என் மீது ஆணையிட்டு கூற இந்த மனிதன் யார்? நிச்சயமாக நான் அந்த மனிதனின் பாவங்களை மன்னித்து விட்டேன். (சத்தியமிட்ட) உன்னுடைய நற்செயல்களை அழித்து விட்டேன்” என்று கூறினான்.

அறிவிப்பவர்: ஜுன்தப் (ரலி)

நூல் : முஸ்லிம் 5115

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.