அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, December 31, 2015

வித்ரு குனூத்...

தினம் ஒரு ஹதீஸ்-28

வித்ருத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் ருகூவிற்கு முன்போ அல்லது ருகூவிற்கு பின்போ ஓத வேண்டிய துஆவின் பெயரே குனூத் எனப்படும். அதற்கான வாசகங்கள்:

           

நான் வித்ருடைய குனூத்தில் ஓதுவதற்காக சில வார்த்தைகளை நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுத் தந்தார்கள்.
(அந்த வார்த்தைகளாவன)
“அல்லாஹூம்மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த. வபாரிக்லீ ஃபீமா அஃதய்த்த. வகினீ ஷர்ர மாகலய்த்த. ஃபஇன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க. வஇன்னஹூ லாயதில்லு மன்வாலைத்த. தபாரக்த ரப்பனா வதஆலைத்த“.

(பொருள்: இறைவா! நீ யாருக்கு நேர்வழி காட்டினாயோ அவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ யாருக்கு துன்பங்களை துடைத்தாயோ அவர்களுடன் எனது துன்பங்களையும் துடைப்பாயாக! நீ யாருக்கு பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ வழங்கியவற்றில் எனக்கு பரக்கத் செய்வாயாக! நீ விதியாக்கியதின் கெடுதியை விட்டும் என்னை காப்பாயாக! நிச்சயமாக நீயே விதிப்பவன். உன்மீது எதையும் விதிக்க முடியாது! நீ யாரை நேசித்து விட்டாயோ அவர் இழிவடைய மாட்டார். எங்கள் இறைவா! உன் அருள் விசாலமானது உன் மகத்துவம் மேலானது.)

அறிவிப்பவர்: ஹஸன் பின் அலி (ரலி)

நூல்: திர்மிதீ 426

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.